தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக குறைந்தது...!!
தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக குறைந்தது...!!
தங்க நகை வாங்குவதில் பல பெண்களுக்கும் அலாதி பிரியம். குருவி போல் சிறுக சிறுக காசு சேர்த்து வைத்து, தங்களுக்கு பிடித்த நகை வாங்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட தங்க நகை விலை குறைந்தது என்கிற செய்தியைக் கேட்டாலே நம் பெண்கள் குஷியாகிவிடுவார்கள். நேற்று அதிரதியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, ரூ.4,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.