தங்கம் விலை இன்றும் சரிவு... மக்கள் குஷி !!

தங்கம் விலை இன்றும் சரிவு... மக்கள் குஷி !!

Update: 2021-03-29 13:09 GMT

சென்னையில் தங்கம் விலை மீண்டும் 34 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.33,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே சென்றது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி உச்சம் தொட்டது. இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. தங்கத்தின் விலை சிறிது நாட்களாக தொடர் சரிவில் இருந்து வருவது மக்கிளிடையே நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,792-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்  8 ரூபாய் குறைந்து, ரூ.4,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 69,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை எந்த மாற்றமில்லாமல் ரூ.69,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News