தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது! அலைமோதும் கூட்டம்!

மார்ச் மாதத் தொடக்கம் முதலே ஏற்றத்திலேயே இருந்த தங்கம் விலை சற்று ஆறுதலாக இன்று குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில், இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,184க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.240 குறைந்து ரூ.33,184க்கு விற்பனையாகிறது.;

Update: 2020-03-11 22:04 GMT

தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவிலான வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் விலை வரலாறு காணாத அளவுக்கு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது.

                                          

மார்ச் மாதத் தொடக்கம் முதலே ஏற்றத்திலேயே இருந்த தங்கம் விலை சற்று ஆறுதலாக இன்று குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில், இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,184க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.240 குறைந்து ரூ.33,184க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிராமுக்கு 31 காசுக்கள் குறைந்து ரூ.49.90க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 50,300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் குறைந்து ரூ.49,900க்கு விற்பனை ஆகிறது.

newstm.in

Tags:    

Similar News