தங்கம் விலை கிடுகிடுவென குறைந்தது !!

தங்கம் விலை கிடுகிடுவென குறைந்தது !!

Update: 2021-03-30 12:33 GMT

கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணை முட்டிய தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து குறைந்துவருகிறது. ஊரடங்கின் போது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது.குறிப்பாக தங்கம் வாங்க நினைப்போர், திருமண நிகழ்ச்சி வைத்திருப்போருக்கு ஒரு இடியாக அமைந்தது. 
இந்நிலையில் தங்கத்தின் விலை சிறிது நாட்களாக தொடர் சரிவில் இருந்து வருவது மக்கிளிடையே நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.328 விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,536-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, ரூ.4,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News