ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை !!

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை !!

Update: 2021-02-25 20:22 GMT

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,144-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை மீண்டும்  சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது.இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,976-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.4,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் 200 ரூபாய் குறைந்து  ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

Tags:    

Similar News