தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு !!

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு !!

Update: 2021-05-15 10:32 GMT

கால் பவுன் தங்கமாவது வருடம் ஒருமுறை வாங்க வேண்டும் என்பதே இந்திய நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு திட்டம். தங்கம் இல்லாத இந்திய குடும்ப விசேஷங்கள் நிறைவு பெறாது.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது நடுத்தர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அக்ஷய திருதி கொண்டாட வசதியாக சற்று இறங்கிய தங்கத்தின் விலை இன்று மறுபடியும் உயர தொடங்கிவிட்டது. 
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News