காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம் விலை !!
காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம் விலை !!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது.இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,712-க்கு விற்பனையாகிறது.அதே போல், காலையில் கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து,மாலையில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ரூ.4,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை மாலையில் கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.