காலையில் ஏறிய தங்கம் விலை மாலையில் திடீர் சரிவு! மக்கள் மகிழ்ச்சி!
காலையில் ஏறிய தங்கம் விலை மாலையில் திடீர் சரிவு! மக்கள் மகிழ்ச்சி!
சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.
உலகம் முழுவதுமே கொரோனா ஊரடங்கு, பல வணிக கட்டிடங்களும், நகைக்கடைகளும் மாதக்கணக்கில் மூடப்பட்டு இருந்தாலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையவில்லை.
இந்நிலையில், தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு குறைந்ததில் இருந்து தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் ஏறிய தங்கத்தின் விலை, மாலை திடீரென குறைந்தது.
இன்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.33,544க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.23 குறைந்து ரூ.4,193ஆக உள்ளது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71ஆக உள்ளது.