மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... !!

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... !!

Update: 2021-07-13 13:13 GMT

இந்தியா விவசாயத்தை நம்பி வாழும் நாடு என்பதால், தங்கம் சேமிக்கும் வழக்கம் எளிதாகத் தொடங்கியது. விவசாயி நல்ல விளைச்சல் இருக்கும்போதெல்லாம், தன் லாபத்தை தங்கத்தில் சேமித்தான். ஒருவனின் செல்வச் செழிப்பானது, மனைவி, தாய், தங்கை அணிந்துள்ள நகைகளின் மூலமே பிரதிபலிக்கப்பட்டது. அக்காலத்தில் நிலம் மற்றும் தங்கம் ஆகிய சொத்துகளை மட்டுமே சேர்க்க முடிந்தது. நிலமே வருமானத்தின் முக்கிய மூலமாக இருந்தாலும், அதை வேண்டிய நேரத்தில் பணமாக்க முடியவில்லை. அவ்வேளைகளில் சேமிக்கப்பட்ட தங்கமே பணம் திரட்ட உதவியது. நகை பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதுவே அவர்களுக்கு நிதி பாதுகாப்பும் அளித்தது.

தங்கத்தின் மவுசு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் அதிகம். ஏனெனில், தங்கம் வெறும் மஞ்சள் உலோகம் மாத்திரமல்ல, அது மனிதர்களின் அந்தஸ்தை பறைசாற்றும் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது  

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,168-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து, ரூ.4,521-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.74,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News