காலையிலேயே மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை !! சவரனுக்கு இவ்வளவு உயர்வா ?
காலையிலேயே மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை !! சவரனுக்கு இவ்வளவு உயர்வா ?
ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடர் சரிவில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக ராக்கெட் வேகத்தில் ஏற தொடங்கியுள்ளது. திருமண விசேஷங்கள் போன்ற சுப காரியங்கள் வைத்திருப்போர் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்த்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.34,376க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.39 ஆக உயர்ந்து, ரூ.4,297 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் ஆக கூறப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 69,300 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து 70,500 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.