விண்ணை தொட்ட தங்கம் விலை..!!

விண்ணை தொட்ட தங்கம் விலை..!!

Update: 2021-07-20 10:26 GMT

தங்கம் பொறுத்தவரை மற்ற நாடுகளில் முதலீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாசாரமாகவே இருந்து வருகிறது. காது குத்து, கல்யாணம் என எந்த விஷேசம் என்றாலும் தங்கத்திற்கே முன்னுரிமை. முறை செய்வது, பாரம்பரிய வழக்கம் என பல பெயர்களில் விஷேசத்தில் முன்னால் நிற்கிறது தங்கம்.

தங்கம் சேமிப்பது அத்தியாவசியம் என மக்கள் இருக்கும் நிலையில் அதன் விலையேற்றம் அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமே உள்ளது. 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,528-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து, ரூ.4,566-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 72,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.72,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News