5 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை..!!

5 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை..!!

Update: 2021-08-11 11:31 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் குறைந்து விட்டன. ஆகையால் இந்தியாவில் தங்கம் இறக்குமதியும் விற்பனையும் குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணை முட்டிய தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து குறைந்துவருகிறது. ஊரடங்கின் போது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது.குறிப்பாக தங்கம் வாங்க நினைப்போர், திருமண நிகழ்ச்சி வைத்திருப்போருக்கு ஒரு இடியாக அமைந்தது. 

இந்நிலையில் தங்கத்தின் விலை சிறிது நாட்களாக தொடர் சரிவில் இருந்து வருவது மக்கிளிடையே நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது.தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.34,984க்கு விற்பனையாகிறது.  இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,373க்கு விற்பனையாகிறது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 67,900 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 200 குறைந்து 67,700 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News