குட் நியூஸ்! தனியாருக்கும் தமிழக அரசு அனுமதி! அதிகரிக்கும் கொரோனா சிகிச்சை மையம்!
குட் நியூஸ்! தனியாருக்கும் தமிழக அரசு அனுமதி! அதிகரிக்கும் கொரோனா சிகிச்சை மையம்!;
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இதனை சமாளிக்கும் வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவமனைகள் மட்டுமல்ல கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளும் உணவகங்களிலும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் எனவும், இதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்த செய்திக்குறிப்பில் சென்னையில் தனியார் உணவகங்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் . மாநகராட்சி அதிகாரிக்கு இ-மெயில் மட்டும் அனுப்பினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.