குட் நியூஸ்! ரஜினி வீட்ல விசேஷம்! களை கட்டும் போயஸ் கார்டன்!
குட் நியூஸ்! ரஜினி வீட்ல விசேஷம்! களை கட்டும் போயஸ் கார்டன்!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம் என்று வாய் முழுவதும் புன்னகையாய் மகிழ்கிறார்கள் போயஸ் கார்டன் குடியிருப்பாளர்கள். ஒரு பக்கம் ரசிகர்களின் கொண்டாட்டம், அண்ணாத்தே ரிலீஸ், மகள்கள் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையில் இருப்பது என ரஜினியும் மீண்டும் உற்சாகமாய், பழைய அரசியல் சறுக்கல்களை மறந்து விட்டு வாழ்க்கையைக் கொண்டாட துவங்கியுள்ளாராம். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு விரைவில் குழந்தை பேறு கிடைக்கவுள்ள நிலையில், நான்காது முறையாக தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கும் - வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விசாகனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது சவுந்தர்யா கர்ப்பமடைந்துள்ளார்.
உடல்நல சிகிச்சைக்கான ரஜினிகாந்த அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது தான் சவுந்தர்யா கர்ப்பமாக இருப்பது உறுதியானது. அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் சென்னை வந்த பிறகு தான் இந்த தகவல் அவரிடம் சொல்லப்பட்டது.
இந்த தகவலை கேள்விப்பட்டதும் ரஜினிகாந்த் மிகவும் சந்தோஷமடைந்துள்ளாராம். வீட்டில் பணியாற்றும் அனைவருக்கும் ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார். இந்தாண்டு முடிவில் சவுந்தர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சவுந்தர்யா - விசாகனுக்கு 5 வயதில் வேத் என்கிற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.