குட் நியூஸ்! வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை!!
குட் நியூஸ்! வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை!!
அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான, ரஸ்ஸல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைராவில், வரும் ஜனவரி 1 முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக உள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால், மற்ற நாடுகளை போன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருக்காது. அதற்கு பதில் வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 8 மணி நேரம் பணி நேரமாகவும், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பணி நேரமாகவும் இருக்கும் என துபாய் அரசு அறிவித்தது.
அதாவது, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட 2.5 நாள்கள் விடுமுறை என நான்கரை நாட்கள் வேலை நாட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து ஷார்ஜா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் வேலை நாட்கள் எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது வருகிற 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in