குட் நியூஸ்! சென்னை வந்தடைந்தது ஸ்புட்னிக் வி தடுப்பூசி!
குட் நியூஸ்! சென்னை வந்தடைந்தது ஸ்புட்னிக் வி தடுப்பூசி!
, உலக நாடுகள் அனைத்துமே கொரோனா தொற்றின் 3ம் அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.பல நாடுகள், தங்களது குடிமக்களுக்கு எத்தனை சீக்கிரத்தில் முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தி, கவர்ச்சிகரமான சலுகைகளையும், இலவசங்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அறிவித்துள்ளன.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி இம்மாதத்தில் இருந்து பயன்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று ரஷியாவின் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி ஹைதராபாத்திலிருந்து தனியார் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் அனைத்தும் போக்குவரத்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அவை வாகனம் மூலம் பெரியபனிச்சேரியிலுள்ள தனியார் ஆய்வகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர், ஒரு பெட்டி தடுப்பூசிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றனர்.அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சினைத் தொடர்ந்து, ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இம்மாத மத்தியிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.