குட் நியூஸ்! கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
குட் நியூஸ்! கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
உலகம் முழுவதுமே இன்னமும் விஞ்ஞானிகள் ‘கொரோனா வைரஸ்’ குறித்து தலைமுடியை பிய்த்து கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அது உருமாறி, பரவி வரும் வேகம், உலக விஞ்ஞானிகள் குழப்புகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தாலும், சில நாடுகளில், கொரோனா வைரஸின் எதிர்ப்பு சக்தி, இயல்பாகவே அந்நாட்டு மக்களின் உடலில் வந்து விடுவதும் மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
Doctors say a Florida mother who received one dose of Moderna vaccine while pregnant has passed antibodies to her newborn.
— CBS News (@CBSNews) March 17, 2021
Her child is believed to be the first baby known to be born with COVID-19 antibodies. pic.twitter.com/tZQFNx0S7i
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்படி பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளரான அந்த பெண், கர்ப்பமடைந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். தற்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அந்த குழந்தையின் உடலில் இயற்கையாகவே கொரோனா வைரஸுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர், அந்த பெண்ணின் உடலில் உருவான எதிர்ப்பு சக்தி, நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து குழந்தைக்கும் கிடைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.