குட் நியூஸ்.. ஒமைக்ரான் தொற்றால் நன்மை.. மருத்துவ நிபுணர் தகவல்..!

குட் நியூஸ்.. ஒமைக்ரான் தொற்றால் நன்மை.. மருத்துவ நிபுணர் தகவல்..!

Update: 2022-01-24 10:45 GMT

கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறி இருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இந்த தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறுகையில், “ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும், 2-வது அலை கொடூரமாகவும் இருந்தது.

2-வது அலைக்கு பின் ஸ்பானிஷ் காய்ச்சல் மிகவும் லேசாக, அதாவது சாதாரண ஜலதோஷம் போலவே மாறியது. அதைப்போல கொரோனாவின் 3-வது அலையும் 2-வது அலையை விட லேசாகவும், அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருக்கிறது. இதற்கு பிறகு 4-வது அலை இந்தியாவில் இருக்காது.

அந்த வகையில், தற்போதைய சான்றுகளை பார்க்கும்போது, இந்த தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு மாறுபாடாகவே ஒமைக்ரான் அலை மாறக்கூடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News