செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி இனி 28 நாட்கள் இல்லை..!!
செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி இனி 28 நாட்கள் இல்லை..!!
செல்போன் பிரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், ‘அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்ற வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 நாட்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் கிடைத்து வந்த நிலையில், தற்போது அது 28 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் நிலை நிலவியது.
இதனால், வாடிக்கையாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுவந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு, ஒரு மாத ரீசார்ஜ் திட்டத்திற்கான கால அளவை 28 நாட்களில் இருந்து 30 நாளாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என’ உத்தரவிட்டுள்ளது.