வேலை தேடுவோருக்கு குட் நியூஸ்.. வரும் 11ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!
வேலை தேடுவோருக்கு குட் நியூஸ்.. வரும் 11ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11ம் தேதி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாம் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், 5 முதல் 12ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரி பொறியியல், தையல் பயிற்சி மற்றும் நர்சிங் படித்துள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. முகாமில் கலந்துகொள்ளும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.