பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயிலில் பயணிக்க இது தேவையில்லை..!

பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயிலில் பயணிக்க இது தேவையில்லை..!

Update: 2022-01-29 04:45 GMT

புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இனி தேவையில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புறநகர் ரயிலில் பயணிக்க இனி தடுப்பூசி சான்று தேவையில்லை என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. அத்துடன், சீசன் டிக்கெட் வாங்கவும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை இனி காண்பிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகள் வழக்கம் போல முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News