மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.. மின் கட்டணம் குறைய வாய்ப்பு..!
மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.. மின் கட்டணம் குறைய வாய்ப்பு..!
இந்தியா முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், 12 சதவீத என்ற அளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக, 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் அதிக தூரம் செல்லும் மின் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தனித்தனி சுவிட்ச் யார்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், மின் வழித்தடத்தில் பழுது ஏற்படும் போது அந்த வழித்தடம் முழுவதும் மின் விநியோகத்தை நிறுத்துவதற்கு பதில் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அதற்கு உட்பட்ட 2 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால், நுகர்வோர் அதிக அளவில் பாதிக்கப்படாமல் தவிர்க்க முடியும்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் அனைத்து மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்களிலும் மீட்டர் பொருத்தப்படும். மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது மின் இழப்பு ஏற்படுவது வழக்கம்.
புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் இதனை குறைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது மின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம் போன்ற செலவுகளை உள்ளடக்கிய 1 யூனிட் மின்சாரம் விற்பனை ரூபாய் 9.71-ஆக உள்ளது. ஆனால் வரவு ரூபாய் 7.71-ஆக இருப்பதால் 2 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் குறைக்க முடியும்’ என்று கூறியுள்ளனர்.
ஒரு யூனிட் மின்சாரத்தை சுமார் 9 ரூபாய் என்ற அளவில் வாங்கி வருவாய் 2 ரூபாய் நஷ்டத்தில் கூட அதை குறைந்த விலைக்கு மின்வாரியம் பொதுமக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், தற்போது நஷ்டம் குறைவதால் மின் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.