பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. கால அவகாசம் அளித்துள்ளது கல்வித்துறை..!
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. கால அவகாசம் அளித்துள்ளது கல்வித்துறை..!
ஐந்து ஆண்டுகளாக மதிப்பெண் சான்றிதழ் பெறாத பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பாக மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரி மற்றும் காரைக்காலில், மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரையிலான பருவங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், இதுவரை மதிப்பெண் சான்றிதழ் பெறவில்லை எனில், அதை பெற்றுக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய காலகட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் கடலூர் அரசு தேர்வர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ளன.
மதிப்பெண் சான்றிதழ் பெறாதவர்கள், இறுதி வாய்ப்பாக இன்று (7ம் தேதி) முதல், மூன்று மாதங்களுக்குள் அலுவலக வேலை நாட்களில், கடலூர் அலுவலகத்தில் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.