ரேஷன் கடை ஊழியர்களுக்கு நற்செய்தி.. கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு..!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு நற்செய்தி.. கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு..!

Update: 2022-01-13 17:06 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஒரு கார்டுக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரிசி கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கி வருகிறது.

இதனால், ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால், ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் ஊழியர்களுக்கு கார்டுக்கு 50 காசு வீதம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, ஊக்கத்தொகை வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

Similar News