மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி... விரைவில் இலவச ஸ்மார்ட் போன்..!
மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி... விரைவில் இலவச ஸ்மார்ட் போன்..!
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடம் கற்றுக் கொள்ள முடிகிறது.
ஆனாலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இதற்கு, அவர்களிடம் ஸ்மார்ட் போன் அல்லது லேட்டாப் போன்ற வசதிகள் இல்லாததே காரணம்.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு சம்க்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பட்டியல் கிடைத்த உடன், மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ஸ்மார்ட் போன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.