தல தோனி ரசிகர்களுக்கு ஒர் இன்ப செய்தி..!!

தல தோனி ரசிகர்களுக்கு ஒர் இன்ப செய்தி..!!

Update: 2021-07-08 15:19 GMT

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் மகேந்திர சிங் தோனி. இந்தியாவின் கேப்டனாக பொறுப்பெற்று பல கோப்பைகளை வென்று கொடுத்தவர். அவரின் வெற்றி சூத்திரம் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தது. சென்னை அணிக்காக மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை சிஎஸ்கே-வின் கேப்டனாகவே தோனி இருந்து வருகிறார். வேறு எந்த கேப்டனுக்கும் இல்லாத சிறப்பம்சம் தோனியிடம் உள்ளது.

இச்சூழலில், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரே அவருக்குக் கடைசி தொடர் என்று கூறப்பட்டுவருகிறது. எப்போதுமே ஓய்வுமுடிவை அதிரடியாக அறிவிப்பவர் தோனி. ஐபிஎல் தொடரிலும் இவ்வருடம் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்று தகவல் சொல்லப்படுகிறது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோனி சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஐபிஎல் சீசன் முடிவின்போது அவரிடம் “இதுதான் உங்களது கடைசி ஐபிஎல் தொடரா..?” என்ற கேள்விக்கு, அவர் definitely not என்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக தோனி ஆயத்தமானார். கடந்த ஆண்டு ஏற்பட்ட பரிதாப தோல்விகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பித்தந்தார். தோனி கம்பேக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் குதுகலித்தனர். ஆனால், கொரோனா வந்து ஐபிஎல் தொடரை ஒத்தி வைத்துவிட்டது. இந்த ஆண்டுதான் தோனிக்கு கடைசி சீசன் என அனைவரும் கூறிவந்த நிலையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மகேந்திர சிங் தோனிக்கு இதுதான் கடைசி ஆண்டு என்று யாரும் நினைக்க வேண்டாம்” என, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவரிடம் தோனி ரிட்டையர்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மகேந்திர சிங் தோனி கேப்டனாக சிஎஸ்கே அணியுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள் பயணிப்பார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இரண்டு ஆண்டுகள் விளையாடுவதற்கான உடற்தகுதி அவரிடம் இருக்கிறது. அவர் ரிட்டையர்டு ஆவதற்கான எந்தக் காரணமும் இல்லை. அவரை நீக்குவதற்கான காரணமும் எங்களிடம் இல்லை” என்றார்.
Tags:    

Similar News