வாக்காளர்களுக்கு குட் நியூஸ்.. ஓட்டுச்சாவடிகளை கண்டறிய புதிய வசதி அறிமுகம்..!
வாக்காளர்களுக்கு குட் நியூஸ்.. ஓட்டுச்சாவடிகளை கண்டறிய புதிய வசதி அறிமுகம்..!
நகர்ப்புற உள்ளாட்சி வார்டு எல்லை சீரமைக்கப்பட்டுள்ளதால், ஓட்டுச்சாவடி விவரத்தை தெரிந்து கொள்ள மாநில தேர்தல் ஆணையம் புதிய வசதியை செய்துள்ளது.
வார்டு எண் மற்றும் எல்லை மாற்றப்பட்டுள்ளதால், வாக்காளருக்கு அதுகுறித்த விவரம் முழுமையாகத் தெரியவில்லை. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம், 'ஆன்லைன்' மூலம் ஓட்டுச்சாவடி, வார்டு விவரங்களை தெரிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது.
அதன்படி, வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், தந்தை அல்லது கணவர் பெயர், மாவட்டம், உள்ளாட்சி அமைப்பின் பெயர், வார்டு எண், வசிக்கும் வீதி, ஓட்டுச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை எண் என 11 வகை விவரங்களை ஆன்லைனில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் ஓட்டுச்சாவடியை அறிந்துகொள்ள வசதி செய்துள்ளது.
https://tnsec.tn.nic.in/tn_election-_urban2021/find-_your_polling_station.php என்ற இணைய தொடர்பில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு, அங்கிருக்கும் குறியீட்டு எண்ணை பதிவிட்டால், முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்’ என்றனர்.