குட் நியூஸ்.. தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.. அரசு அதிரடி அறிவிப்பு..!
குட் நியூஸ்.. தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.. அரசு அதிரடி அறிவிப்பு..!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
இதன்போது, அந்த பணிகள் நடக்கும் இடங்களில் உள்ள மின் இணைப்புகளில், காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம், மின் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
இந்நிலையில், பிப். 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக, தேர்தல் முடியும் வரை மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின்தடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாத மின்தடை குறித்து 1912 என்ற எண்ணுக்கு அழைத்து எப்போது வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி, 9445850811 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 044-28521109, 044-28524422 என்ற தரைவழி எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.