அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம்.. சம்பள உயர்வு.. ஜனவரி 26-ல் முக்கிய அறிவிப்பு?

அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம்.. சம்பள உயர்வு.. ஜனவரி 26-ல் முக்கிய அறிவிப்பு?

Update: 2022-01-07 07:45 GMT

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சமீபத்தில் தான் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதேநேரம், அகவிலைப்படி விரைவில் 34 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக, அடிப்படை ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தைகள் அதிகரித்துள்ளன. ஜனவரி 26ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு தொடர்பாக, ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்துவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேலை ஃபிட்மென்ட் காரணியை மத்திய அரசு உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதாவது அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக அதிகரிக்கும்.
  

இது தொடர்பாக தொழிலாளர் துறை, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு குறைந்தபட்ச சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டில் ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டது. அதில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 6,000 ரூபாயில் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.

தற்போதைய தகவலின்படி, அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது. அதேபோல, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்படவுள்ளது. 18 மாதங்களுக்கான தொகை நிலுவையில் உள்ளதால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.2 லட்சம் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in
 

Tags:    

Similar News