இனி தடுப்பூசி போட்டால் தான் அனுமதி! அரசு அதிரடி உத்தரவு!

இனி தடுப்பூசி போட்டால் தான் அனுமதி! அரசு அதிரடி உத்தரவு!

Update: 2021-08-07 12:15 GMT

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை காட்டினால்தான் கோயில்களுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இமாச்சல் பிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை எந்த அளவுக்கு வரும், அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நாடு முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் வரும் 9ம் தேதி முதல் சர்வன் அஷ்டமி நவராத்ரா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இத்திருவிழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். கொரோனா பரவல் நேரத்தில் பக்தர்கள் கூடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் பல கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

 அதன்படி, மாநிலத்திற்குள் நுழையும் நபர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றை காண்பிக்க வேண்டும். மேலும், உள்ளூர் மக்களும், வெளி மாநில மக்களும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். கோயிலுக்குள் நுழைவதற்கு கொரோனா நெகட்டிவ் சான்றை காட்டினால் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News