ஆப்கானில் அரசு ஊழியர்கள் பயப்பட வேண்டாம்.. தலிபான்கள் புதிய அறிவிப்பு !!
ஆப்கானில் அரசு ஊழியர்கள் பயப்பட வேண்டாம்.. தலிபான்கள் புதிய அறிவிப்பு !!
பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் தற்போது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆப்கான் விவகாரம். அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் முழுமையாக சென்றுவிட்டது என்ற நிலையில் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏனெனில் தலிபான்கள் பழமைவாதிகள். இஸ்லாமிய பழமை சட்டங்களை கடுமையாக கடைபிடிப்பர் என்பதால் குறிப்பாக பெண்கள் சமூகம் பெரும் அச்சத்தில் உள்ளது. ஏனெனில் பெண்கள் வீட்டில் இருந்துவெளியே வந்தால் ஆண்கள் உடன் வரவேண்டும். இல்லையெனில் மரண தண்டனை கூட வழங்கும் நிலை ஏற்படும்.
இதனால் ஆப்கானிஸ்தானியர்கள் வீடுகளில் அச்சத்துடனே இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
newstm.in