2022ம் ஆண்டில் அரசின் விடுமுறை நாட்கள்.. முழுமையான பட்டியல் இதோ..
2022ம் ஆண்டில் அரசின் விடுமுறை நாட்கள்.. முழுமையான பட்டியல் இதோ..
ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையை வெளியிடும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த தகவல் இதோ...
மொத்தமாக 23 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.இவற்றில் 22 நாள்கள் அனைவருக்கும் பொருந்தும். 1 நாள் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு மட்டும் பொருந்தும் விடுமுறையாக வழங்கப்படுகிறது.
அதன்படி, ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி ஆகிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தியும், ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.