ரேஷன் கடைகளில் இன்று முதல்.. அட்டைதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!

ரேஷன் கடைகளில் இன்று முதல்.. அட்டைதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!

Update: 2022-01-12 13:41 GMT

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதன்படி கடந்த 4ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதால், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பொங்கல் சிறப்பு தொகுப்பு 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டதால் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

Similar News