அரசு வேலை கிடைக்கும்.. மாற்றுத்திறனாளிகளைக் குறிவைத்து ஏமாற்றிய அரசு அதிகாரி..!

அரசு வேலை கிடைக்கும்.. மாற்றுத்திறனாளிகளைக் குறிவைத்து ஏமாற்றிய அரசு அதிகாரி..!

Update: 2020-02-06 17:30 GMT

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த அரசுப்பேருந்து ஓட்டுநர் மனைவி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன், அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். முருகன் தனது மனைவி ஷீலா, மைத்துனர் கோவிந்தராஜ் மற்றும் மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருமால் ஆகியோருடன் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கூறியுள்ளார்.

 இதை நம்பி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரிடம் தலா 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை என சுமார் ரூ. 80 லட்சம் வாங்கியுள்ளார். பணம் கொடுத்து 6 மாதம் ஆகியும் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். வேலை வாங்கித் தர முடியாவிட்டால் கொடுத்த பணத்தையாவது திருப்பித் தருமாறு பணம் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர். வேலையும் வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் முருகன் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதை அடுத்து பணம் கொடுத்த 20க்கும் மேற்பட்டவர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்தில் முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மல்லபாடி கிராமத்தில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் முருகனின் மனைவி ஷீலா மற்றும் திருமாலை பிடித்தனர். அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தலைமறைவாக உள்ள அரசு பேருந்து ஓட்டுனர் முருகன் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.  

newstm.in

Tags:    

Similar News