கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு!

Update: 2021-06-25 22:39 GMT

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய நீர்வள ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை வகிக்தார். தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை கர்நாடகா வழங்குவதை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது என காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தர வேண்டிய நீரை தொடர்ந்து தர வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அழுத்தம் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News