இன்று முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
இன்று முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளி ,கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 - 12 வகுப்புவரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனால் பள்ளிகள், கல்லூரிகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மைபடுத்தும் பணிகளும், வளாகங்களில் தூய்மை பணிகளும், வகுப்பறையில் இருக்கைகள் ஏற்பாடு வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தலைமையிலும், கல்லூரிகளில் முதல்வர் தலைமையிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை பின்பற்றியும், கிருமி நாசினி கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்திடவும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவரையும் முககவசம் அணிந்து வருவதை நுழைவு வாயில் பகுதியிலேயே உறுதிபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாணவ-மாணவிகளை வெப்பமானி கொண்டு உடல்வெப்ப நிலையை பரிசோதித்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களின் பயன்பாட்டுக்காக முகக்கவசம், சானிடைசர், கை கழுவுவதற்கு சோப்பு ஆகியவை வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது,
- பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாய், மூக்கை மூடும் வகையில் முகக்கவசத்தை அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.
- அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது.
- பள்ளிகளுக்கு வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனை செய்யவேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- ஆசிரியர்களுக்கும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
- குழுவாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கக் கூடாது.
- தினமும் பள்ளி வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதரக் கூடாது.
- பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதைத் தடுக்க வேண்டும்.
- மாணவர்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனியாக வழிகளை உருவாக்கலாம்.
- பள்ளிகளில் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் நடத்துவதை அந்தப் பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து முடிவு செய்துகொள்ளலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த இந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதைச் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.