ஜனவரி 26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!

ஜனவரி 26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!

Update: 2022-01-04 05:45 GMT

இந்தியாவில் கடந்த ஆண்டு கோடை காலம் முதல் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக பரவியது. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாக கொரோனா  பாதிப்பு குறைந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் எதிர்பாராதவிதமாக மீண்டும் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை எட்டி உள்ளதாக காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் புதிதாக வகை ஒமைக்ரான் பாதிப்பும் அதிகளவு பரவிக்கொண்டு வருகிறது.

இதனால் ஒவ்வொரு மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்திக் கொண்டே வருகின்றன. அதன் வரிசையில், கோவா மாநில அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டு உள்ளது.

கொரோனாவின் பாதிப்பு காரணமாக கோவாவில் இன்று முதல் ஜனவரி 26ம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News