பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலங்கானா அரசும் பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 37,000-ஐ தாண்டி உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் மூன்றாவது அலை கொரோனா பரவல் தொடங்கிவிட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்கு மாநிலங்கள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

அந்த வகையில், ஏற்கனவே கோவா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பையில் மட்டும் பள்ளிகளை மூடவும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இப்படி பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடியும் இரவுநேர ஊரடங்கு பிறப்பித்தும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி வருகிறது. தறபோது அந்த வரிசையில் தெலங்கானா மாநில அரசும் இணைந்துள்ளளது.

மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க தெலங்கானாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். தெலங்கானாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

newstm.in

Tags: