அரசுப் பள்ளி மாணவர்களுக்கு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி மாதத்திற்கான வேலைநாட்களை மட்டும் கணக்கிட்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களுடன் முட்டைகளையும் சேர்த்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கு மட்டும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5 முட்டைகள் வழங்கவும், மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் அழைத்து அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.