Work From Home பார்ப்பவர்களுக்கு அரசின் அதிர்ச்சி செய்தி!!

Work From Home பார்ப்பவர்களுக்கு அரசின் அதிர்ச்சி செய்தி!!

Update: 2021-12-20 09:45 GMT

ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்குள் பயணிகள் வர -பதிவு கட்டாயம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டுக்குள்ளேயே கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிலர் இன்னும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்பும் பணியாளர்களுக்கு சம்பள கட்டுமானத்தில் சில மாறுதல்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக வீட்டு வாடகை அலவன்ஸ் போன்றவற்றை க்ளைம் செய்து கொள்ளும் வசதிகள் இனிவரும் காலங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வதால் பணியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை சரிக்கட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எனவே மத்திய தொழிலாளர் அமைச்சகம் இரண்டு தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு முக்கிய முடிவை எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் நகரை விட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் வாழ்வாதார செலவுகள் குறையும் என்பதை நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்நிலையில் ஊழியர்களின் வரிச்சுமை குறையும் என்றும், அவர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது.

newstm.in

Similar News