பெரும் பரபரப்பு.. சல்மான்கான் பண்ணை வீட்டில் பலர் கொன்று குவிப்பு?
பெரும் பரபரப்பு.. சல்மான்கான் பண்ணை வீட்டில் பலர் கொன்று குவிப்பு?
சல்மான்கான் வீட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் கலக்கி வரும் சல்மான் கான், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கை. உதாரணமாக கடந்த 2002ஆம் ஆண்டு மும்பையில் சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய வழக்கு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. மான்கள் வேட்டையாடிய புகார் என அடுக்கடுக்காக கூறலாம். இதில் மான் வேட்டை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வழக்கில் இருந்து வெளியே வந்தார்.
அடுத்தடுத்து படங்களிலும் பிசியாக நடித்து வந்தாலும், சல்மான் கான், தன்னுடைய ஓய்வு நாட்களை மாகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் கழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பண்ணை வீட்டில் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இந்த பண்ணை வீட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நடிகர் சல்மான் கான் மீது கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பண்ணை வீட்டில் தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடப்பதாகவும், திரையுலகை சேந்த பலர் மரணித்து அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதாகவும் கேத்தன் கக்கட் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இவரின் இந்த புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு எதிராகவும், புகார் கொடுத்த கேத்தனுக்கு எதிராகவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சல்மான் கான். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சல்மான் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், சல்மான்கானின் வீட்டுக்கு அருகே கேத்தன் கக்கட் என்பவர் நிலம் வைத்திருக்கிறார்.
அவர் வேண்டும் என்று சல்மான்கான் மீது அவதூறாக பொய் வதந்திகளை பரப்பி உள்ளார். அவர் மதம் தொடர்பாகவும் தவறாக பேசியிருக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், மேலும் அவர் கூறிய அனைத்தும் பொய் என வாதிட்டார். இதனை தொடர்ந்து சல்மான் கானின் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு கேத்தன் கக்கட்டுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
newstm.in