பெரும் அதிர்ச்சி.. ஸ்ரீகாந்த் காலமானார் !! பிரபலங்கள் கண்ணீருடன் இரங்கல் !!!
பெரும் அதிர்ச்சி.. ஸ்ரீகாந்த் காலமானார் !! பிரபலங்கள் கண்ணீருடன் இரங்கல் !!!
தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். 1965ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.
ஈரோடு மாமவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீகாந்த். சென்னையில் அரசுப்பணியில் இருந்த ஸ்ரீகாந்த், நாடகங்களின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சினிமா பக்கம் திரும்பினார். பின்னர் கே.பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்தது. ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’ என தொடர்ந்து தன் படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தார் பாலசந்தர்.
அதேபோல், இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலம் நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் திரையுலகின் படத்தில் முதல் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த் என்ற பெருமையையும் பெற்றவர்.
சிவாஜி, கணேசன், முத்துராமநம் ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்திலும் நடித்தார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in