பெரும் அதிர்ச்சி.. வீட்டுக்குவந்த நண்பரின் ஆண் உறுப்பை துண்டித்து சாப்பிட்ட ஆசிரியர் !
பெரும் அதிர்ச்சி.. வீட்டுக்குவந்த நண்பரின் ஆண் உறுப்பை துண்டித்து சாப்பிட்ட ஆசிரியர் !
தன்பாலின ஈர்ப்பு கொண்டவரை சந்திக்க சென்ற நண்பரை வெட்டிகொலை செய்து, அவரது ஆண் உறுப்பை துண்டித்து ஆசிரியர் ஒருவர் சுவைத்து சாப்பிட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சமாக உள்ளது.
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மெக்கானிக் ஒருவர் மாயமானதாக குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், காட்டுப்பகுதியில் இடுப்பு எலும்பு ஒன்றை கண்டுபிடித்தனர்.
அது குறித்த விசாரணையில் அடிப்படையில் அந்த மெக்கானிக் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், நர மாமிசம் சாப்பிடும் தன்மை கொண்ட ஒரு ஆசிரியரால் கொல்லப்பட்டதாகவும், அவருடைய ஆண் உறுப்பை துண்டித்த அந்த ஆசிரியர் அதனை சாப்பிட்டதாகவும் போலீசாருக்கு கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
42 வயதான ஆசிரியர், டேட்டிங் ஆப் மூலம் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்த 43 நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என கூறப்படுகிறது. எனவே இருவரும் ஒருவரையொரு நேரில் சந்திக்க விரும்பி ஆசிரியரின் வீட்டுக்கு மெக்கானிக் சென்றிருக்கிறார். அன்றைய தினம், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த ஆசிரியர், மயங்கிய நிலையில் இருந்த மெக்கானிக்கை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். அந்த ஆசிரியர் நரமாமிசம் சாப்பிடும் பழக்கமுடையவர் என கூறப்படுகிறது. மெக்கானிக்கை கொலை செய்து அவருடைய ஆண் உறுப்பை துண்டாக்கி அதனை ஆசிரியர் சாப்பிட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், மெக்கானிக் தனது வீட்டுக்கு வந்த போது இயற்கை மரணம் ஏற்பட்டதாகவும், பயத்தில் அவரின் உடலை வெட்டி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த பெர்லின் நீதிமன்றம் இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், தனது 30 ஆண்டுகால நீதிமன்ற அனுபவத்தில் இப்படியொரு வழக்கை எதிர்கொண்டதில்லை என நீதிபதி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வழக்கு ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
newstm.in