ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோவில் ! தொண்டர்கள் உற்சாகம் !!

ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோவில் ! தொண்டர்கள் உற்சாகம் !!

Update: 2021-01-30 13:53 GMT

மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெருமைப்படுத்தும் வகையில், ஆளும் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. நினைவு இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றன. இதனிடையே, ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதற்கு முன்னதாக, சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள் உள்ளிட்டவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ, புகைப்படங்கள், அவர் படித்தநூல்கள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், 12 ஏக்கரில் ஜெயலலிதா கோயிலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் lதனதுசொந்த செலவில் கட்டியுள்ளா்.  இக்கோயிலில் 7 அடி உயரம் மற்றும் 400 கிலோ எடையில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்துவைத்தார்.  ஜெயலலிதா கோயிலலில் கோபுர கலசங்களுக்கு யாகசாலை பூஜை நடத்தி புனித நீர் ஊற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கோயில் திறப்புவிழா நிகழ்ச்சியில் நீண்ட கால அதிமுக தொண்டர்கள் கவுரபவிக்கப்பட்டனர். மேலும், 234 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. 

Tags:    

Similar News