பெரும் சோகம்.. பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலாப் பயணிகள் பலி !

பெரும் சோகம்.. பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலாப் பயணிகள் பலி !

Update: 2022-01-09 07:52 GMT

பாகிஸ்தானில் வீசிய பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள முர்ரீ என்ற மலைவாசஸ்தலம், சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாகவும் பனிப்பொழிவுக்கு பிரசித்தியும் பெற்ற இடம். தற்போது அங்கு பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், இங்கு ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், திடீரென பனிப்புயல் தாக்கியதால் சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் ஏராளமான வேன்கள், கார்கள் பனிப்புயலில் சிக்கின. சில இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து வாகனத்தின் மீது விழுந்தன. தகவலறிந்து மீட்புப்படையினர் வருவதற்குள் சுற்றுலாப் பயணிகள் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வரலாறு காணாத அளவுக்கு பெய்த பனிப்பொழிவே சுற்றுலாப் பயணிகள் இறப்புக்கு காரணம் என பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பனிமலையில் ஆங்காங்கே சிக்கியுள்ள வாகனங்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். முர்ரீ பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக கூறினார்.

newstm.in

Tags:    

Similar News