பெரும் சோகம்.. மின்னல் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்வு !!
பெரும் சோகம்.. மின்னல் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்வு !!
ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை உள்ளது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் இங்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இந்தநிலையில், நேற்று (ஜூலை 11) மாலையில் மாநிலம் முழுவதும் அதீத மழை பெய்தது. இந்நேரத்தில் பலர் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி அரண்மனை சுற்றுப்பகுதிகளை பைனாகுலர் மூலம் பார்த்து கொண்டிருந்தனர். மேலும் சிலர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் பலியாகினர். இதில் 7 பேர் சிறுவர்கள். இதேபோல், கோடா, ஜலாபர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர்.
பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். மழைக் காலத்தில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் உத்தர பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 41 பேர் இறந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வாங்கப்படம் என்றும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் நிவாரண ஆணையர் தெரிவித்தார். மேலும் மின்னல் தாக்கியதில் 250 கால்நடைகள் இறந்ததாகவும், 20 கால்நடைகள் காயமடைந்ததாகவும் கூறினார்.
newstm.in