காவல்துறையில் பெரும் சோகம்.. அறையில் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!!

காவல்துறையில் பெரும் சோகம்.. அறையில் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!!

Update: 2021-12-23 13:30 GMT

கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் ஆய்வாளராக செல்வராஜ் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி, மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். செல்வரால் கோவையில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் முகாமில் இருந்த செல்வராஜ் நேற்று பிற்பகல் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். ஆனால், அறையில் உள்ள  மின்விசிறியில், அவர்  லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 

 
இதனிடையே, செல்வராஜ் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அவரது அறைக்கு சென்று காவலர்கள் தேடியுள்ளனர். அப்போது, செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடலை மீட்ட சக காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் காவல் ஆய்வாளர்  தற்கொலைக்கான காரணம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குடும்ப பிரச்சனை காரணமாக செல்வராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News