பெரும் சோகம்.. தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த இளம் தொழிலாளர்கள் !

பெரும் சோகம்.. தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த இளம் தொழிலாளர்கள் !

Update: 2021-12-09 20:33 GMT

தனியார் செங்கல் சூளையில் வெல்டிங் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
 
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த சூளையில் பல்வேறு பணிகளுக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், செங்கல் சூளையில் கொட்டகை அமைப்பதற்காக வெல்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், வழக்கமான பணிகளை மேற்கொள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்றபோது வெல்டிங் செய்வதற்காக போடப்பட்டிருந்த தகரங்களை மிதித்தனர். இதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமணா (23), பிரசாந்த் (22) ஆகிய 2 இளம் தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 


இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார், 2 சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News