சர்க்கர நாற்காலியில் 24 மணி நேரத்தில் 213 கி.மீ பயணித்து கின்னஸ் சாதனை.. மனஉறுதி இருந்தால் முடக்கம் ஒரு தடையல்ல..
சர்க்கர நாற்காலியில் 24 மணி நேரத்தில் 213 கி.மீ பயணித்து கின்னஸ் சாதனை.. மனஉறுதி இருந்தால் முடக்கம் ஒரு தடையல்ல..
28 வயது இளைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு 24 மணி நேரத்தில் நகரில் 213 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கமலகாந்த் நாயக். தனது முடக்கத்தை தகர்த்தெரிந்து இன்று இந்தியா முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறார். பாரா தடகள வீரரான கமலகாந்த் நாயக், தனது சொந்த ஊரில் உள்ள நகரின் ராஜ்மஹால் மற்றும் மாஸ்டர்கேண்டீன் சதுக்கத்திற்கு இடையிலான 1.14 கி.மீ தூரத்தை 189 முறை கடந்துள்ளார்.
அடுத்து உலகளவில் சாதனை படைக்க தனது கவனத்தை செலுத்தினார். அதன்படி, கடந்த ஜனவரி 15ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் தனது இருக்கை வாகனங்களின் சக்கரங்களைத் திருப்பத் தொடங்கிய அவர், ஜனவரி 16ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நிறுத்தினார். அதாவது, பாரா தடகள வீரர் கமலகாந்த் நாயக் தனது சக்கர நாற்காலியில் 24 மணி நேரத்தில் 213 கிமீ தூரம் கடந்தார்.
இந்த சாதனை பயணத்தை பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை அறிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் அதிகாரிகளை அணுகியிருந்தனர். வீடியோ காட்சிகள், ஜிபிஎஸ் தரவு மற்றும் சுயாதீன தகுதியுள்ள சாட்சிகள் என மூன்று வடிவங்களில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. நாயக்கின் சாதனை கின்னஸ் புத்தகத்தின் அங்கீகாரத்தைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று இந்த சாதனையை பயணத்தை ஒருங்கிணைத்த பெட்டர் லைஃப் அறக்கட்டளையின் பிரதிநிதி கூறியுள்ளார்.
மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற வாசகத்துடன் கமலகாந்த் நாயக்குக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு போர்ச்சுகல்லைச் சேர்ந்த மரியோ டிரிண்டடே, 24 மணி நேரத்தில் 182.4 கிமீ (113.34 மைல்) கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கமலகாந்த் நாயக் முறியடித்தார்.
இது குறித்து கமலகாந்த் நாயக் கூறுகையில், முதுகுத் தண்டு காயத்திற்குப் பிறகு, நான் தற்கொலை எண்ணங்களுடன் போராடினேன். ஆனால் நான் குணமடைய குடும்பத்தினர், பயிற்சியாளர், மருத்துவர்கள் உறுதுணையாக இருந்தனர். இதனால் சாதிக்க முடிந்ததாக அவர் கூறினார்.
Determination and willpower can make you achieve anything! 💯
— MyGovIndia (@mygovindia) January 17, 2022
And such is an example of Kamalakanta Nayak, a para-athlete from Puri, Odisha who has entered the Guinness Book of World Records by covering 213 km in 24 hours on his manual wheelchair. 🙌 pic.twitter.com/2FyWCg5ymg
newstm.in