அமெரிக்காவில் ஹெச்1பி விசா ! பைடன் நிர்வாகம் அதிரடி முடிவு !!
அமெரிக்காவில் ஹெச்1பி விசா ! பைடன் நிர்வாகம் அதிரடி முடிவு !!
அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், ஹெச்1பி விசாவில் பணியாற்றுபவர்களுக்கு அன்றைய அதிபர் டிரம்ப் பல்வேறு விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இதனையடுத்து, ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறும் உரிமையான ஹெச்4 விசா திட்டத்தை தடை செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த தடையை சட்ட வடிவம் பெற இருந்தது.
ஆனால், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததால், புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், ட்ரம்ப் கொண்டு வந்த ஹெச்4 விசாவுக்கான தடையை நீக்கினார். மேலும், ஹெச்1பி விசா வைத்துள்ள கணவன் - மனைவிக்கான வேலைவாய்ப்பு திட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர்.